உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் பிரசாரத்தை துவக்கிய நா.த., வேட்பாளர்

திருப்புத்துாரில் பிரசாரத்தை துவக்கிய நா.த., வேட்பாளர்

திருப்புத்துார்: லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நா.த.க. சிவகங்கை தொகுதி வேட்பாளர் எழிலரசி தனது பிரசாரத்தை துவக்கினார். நேற்று திருப்புத்துார் மருதுபாண்டியர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி மக்களிடம் ஆதரவு தர கோரினார். அவர் பேசியதாவது:எல்லா கட்சிகளும் கூட்டணி பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. நாங்கள் மக்களைச் சந்திக்க துவங்கி விட்டோம். பல முறை எம்.பி., எம்.எல்.ஏ., ஆன இவர்கள் பாசன வசதி செய்தனரா. தொழில், வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்தார்கள். இவ்வாறு பேசினார். விவசாயிகள் அணி நிர்வாகி சிவராமன், ரமேஷ் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்இளஞ்செழியன் பேசினர். நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை