தவற விட்ட நகை ஒப்படைத்த கடைக்காரர்
திருப்புத்துார்: திருப்புத்துாரில் குளிர்பானக் கடையில் பெண் விட்டுச் சென்ற 4 பவுன் தங்க நகை மற்றும் 9610 ரொக்க பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த கடைக்காரரை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.திருப்புத்துார் ஒன்றியம் கோட்டை யிருப்பைச் சேர்ந்த மலர்விழி என்பவர் நேற்று முன்தினம், மேலரத வீதியில் உள்ள நகைக்கடையில் 3பவுன் தங்க செயின் மற்றும் ஒரு பவுன் தாலி வாங்கியுள்ளார்.பின்னர் அருகிலுள்ள குளிர்பானக் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.குளிர்பானக் கடையில் நகை,ரூ.9610 வைத்திருந்த பர்ஸை அங்கு வைத்து விட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பர்ஸை பார்த்த கடைக்காரர் சண்முகம் பர்ஸில் பணம், நகையை பார்த்து விட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.பர்ஸை தேடி வந்த மலர்விழி, பர்ஸ் போலீசாரிடம் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். இன்ஸ்பெக்டர் பிரான்வின் டானி, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் ஆகியோர் கடைக்காரர் சண்முகம் முன்னிலையில் பர்ஸை மலர்விழியிடம் ஒப்படைத்தனர்.