உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருடிய பெண்கள் கைது

திருடிய பெண்கள் கைது

சிவகங்கை, - சிவகங்கை மாவட்டம் கண்ணமுத்தான்கரை செந்தில்குமார் மனைவி காளீஸ்வரி 35. இவர் மதுரை முக்கு பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது அருகில் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் பெரிய ஊர் சேரியை சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜீவா 47, சண்முகம் மனைவி ஆறுமுக செல்வி 45, முத்து மனைவி சுமிதா 42, மூவரும் காளீஸ்வரியின் பேக்கில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளனர்.காளீஸ்வரி சத்தம் போடவும் அருகில் இருந்தவர்கள் மூவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.காளீஸ்வரியின் புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ