உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம் 

திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம் 

சிவகங்கை: கல்லலில் உலக திருக்குறள் கூட்டமைப்பு கிளை கூட்டம் நடந்தது.பள்ளி மாணவி லக்சிதா திருக்குறள் வாழ்த்து பாடினார். பேராசிரியை நித்யா வரவேற்றார். கூட்டமைப்பு மாநில துணை தலைவர் புலவர் மெய்யாண்டவர் தலைமை வகித்தார். வாழ்வியலோடு பொருந்தும் திருக்குறள் என்ற தலைப்பில் தியாகராஜன் பேசினார். ஆசிரியர்கள் கண்ணதாசன், முருகன் வாழ்த்துரை வழங்கினர். கல்லல் பிரிட்டோ மேல்நிலை பள்ளி மாணவர் கவிபாரதி, முருகப்பா மேல்நிலை பள்ளி மாணவி திரிஷா ஆகியோர் திருக்குறள் ஒப்புவித்தனர். விழா ஏற்பாட்டை மாவட்ட பொறுப்பாளர் பிரபு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ