உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷனில் பொருள் வாங்காதவர்கள் பொருளில்லா அட்டையாக மாற்றலாம்

ரேஷனில் பொருள் வாங்காதவர்கள் பொருளில்லா அட்டையாக மாற்றலாம்

சிவகங்கை,: ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமத்தை விட்டுக்கொடுக்கலாம்.தங்களது உரிமத்தை விட்டுக்கொடுக்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோத் திட்ட வலைதளமான www.tnpds.gov.inஎன்ற வலைதளத்தின் வாயிலாக தங்களது உரிமத்தை விட்டுக்கொடுத்து குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை