உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூர் மாசித் தெப்பம்

திருக்கோஷ்டியூர் மாசித் தெப்பம்

திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி மக தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு நேற்று திருப்புத்துாரில் முன்னேற்பாடுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் பிப். 24 ல் நடைபெற உள்ளது. முன்னேற்பாடு குறித்து நேற்று பல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பால்துரை தலைமை வகித்தார். தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் செல்லமுத்து, டி.எஸ்.பி. ஆத்மநாபன், தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன், வருவாய்த்துறை, போலீசார், போக்குவரத்து, மின்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறையினர் பங்கேற்றனர்.போக்குவரத்து, குடிநீர்,கழிப்பட, மின்விளக்கு, வாகன நிறுத்தம், பஸ் நிறுத்தம், சுகாதார மேலாண்மை மற்றும் தொடரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி