உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்குவரத்து நெரிசல் போலீசார் அலட்சியம்

போக்குவரத்து நெரிசல் போலீசார் அலட்சியம்

தேவகோட்டை,: தேவகோட்டை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கடைவீதியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பள்ளிகள் திறந்த இந்நேரத்தில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.லட்சுமிபுரம் வள்ளியப்பன் கூறியது: போக்குவரத்து சிக்கலில் வெயிலால் நொந்து போகிறோம். போலீசார் எதையும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். நகருக்குள் போக்குவரத்து திணறலை பார்க்காமல் ஊரை விட்டு வெளியே ரோந்து செல்கின்றனர்.முள்ளிக்குண்டு முதல் ஒத்தக்கடைக்கு அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். போலீசார் நகருக்குள் இருந்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை