மானாமதுரை மெயின் ரோட்டில் வாகன நெரிசலில் சிக்கி தவிப்பு
மானாமதுரை: மானாமதுரை மெயின் பஜாரில் வாகன நெரிசலால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக புகார் எழுந்தது. மானாமதுரை உச்சிமாகாளியம்மன் கோயிலில் இருந்து கனரா பேங்க் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் மெயின் பஜாரில் ஏராளமான வணிக நிறுவனங்கள், வங்கிகள், கோயில்கள் உள்ளன. இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நெரிசல் நிறைந்த இந்த ரோட்டில் கடைக்காரர்கள் ரோட்டை ஆக்கிரமித்து படிகள் மற்றும் விளம்பர பலகை வைத்துள்ளனர். கடைக்காரர்கள், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல் அதிகரிக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல் லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. கடைகளுக்கு சரக்குகளை இறக்க வரும் லாரிகளும் கடையின் முன் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெயின் பஜாரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்.