ஆசிரியர்களுக்கு பயிற்சி
எஸ்.புதுார் : எஸ்.புதுார் வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது. இதில் 112 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். படைப்பு திறன், கற்றல் விளைவுகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் வனிதாமலர், முகமது ஆசாத், ஜெயலட்சுமி, அப்சரா பானு, பயிற்சியளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் மெய்யாத்தாள் செய்திருந்தார்.