| ADDED : ஜன 09, 2024 11:43 PM
சிவகங்கை : சிவகங்கை போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., கூட்டமைப்பு கூட்டுக்குழு தொழிற்சங்கங்கள், ஓய்வுபெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தமிழக அரசை கண்டித்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்கிடவேண்டும். ஓய்வூதியத்திற்கு ஒப்பந்தப் பலன், அகவிலைப்படி உயர்வு வழங்கிடவேண்டும்.பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்,15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் அசோக், சி.ஐ.டி.யு., சமயத்துரை, ஓய்வுபெற்றோர் சங்கம் குமரராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.