உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  த.வெ.க., சட்டசபை தொகுதி கூட்டம் 

 த.வெ.க., சட்டசபை தொகுதி கூட்டம் 

சிவகங்கை: சிவகங்கையில் சட்டசபை தொகுதி த.வெ.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் முத்துபாரதி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் பரமேஸ் வரன், நகர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மற்றும் மானாமதுரை சட்டசபை தொகுதிக்குட்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர். ஆலோசனை கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்- கரத்தை பலப்படுத்தும் விதமாக முழு வீச்சில் கட்சியினர் களப்பணி ஆற்ற வேண்டும் என தீர்மானித்தனர். திருப்புத்துார்: திருப்புத்துாரில் த.வெ.க. ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் தாஜ் அப்துல்லா தலைமை வகித்தார். சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் பங்கேற்றார். மாலிக், நாகராஜ் உள்ளிட்ட நிர் வாகிகள் பேசினர். கிளைக்கழக நிர் வாகிகள், ஓட்டுச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை