உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரால் அவதி

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரால் அவதி

மானாமதுரை : மானாமதுரை அருகே ஏனாதி கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் மதகு அணையில் இருந்து ஏனாதி கோட்டை எம்.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மானாமதுரை மற்றும் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரோட்டில் உள்ள ரயில் பாதையின் கீழ் புறம் சுரங்கப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கு மழை நீர் வெளியேற முறையான நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாக தற்போது சிறிய மழை பெய்தாலே இங்கு அதிகளவில் மழை நீர் தேங்குவதால் இவ்வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஆட்டோ, கார் போன்ற சிறிய ரக வாகனங்கள் மழை நீரில் சிக்கி அடிக்கடி பழுதாகி வருவதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகிற நிலையில் ரயில்வே நிர்வாகம் இப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை