உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழுதாகி நின்ற வாகனத்தில் டூவீலர் மோதி சிறுவன் பலி

பழுதாகி நின்ற வாகனத்தில் டூவீலர் மோதி சிறுவன் பலி

திருப்புவனம், : திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தில் பழுதாகி நின்ற சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதியதில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தார்.திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சரண்ராஜ் 33, மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி அபிராமி 28, மகன் ருத்ரேஷ் 2, ஆகியோருடன் டூ வீலரில் ( ஹெல்மெட் அணிந்திருந்தார்) மதுரையில் இருந்து 4 வழிச்சாலை வழியாக திருப்பாச்சேத்தி சென்றார். தட்டான்குளம் என்ற இடத்தில் குறுகிய வளைவில் திரும்பும் போது பின்னால் வந்த பஸ் டிரைவர் ஹாரன் அடித்ததால் அதிர்ச்சியடைந்த சரண்ராஜ் பழுதாகி நின்ற சரக்கு வேனின் பின்புறம் மோதியதில் சரண்ராஜ் , அபிராமி காயமடைந்தனர். இரு சக்கர வாகனத்தின் முன்புறம் அமர்ந்திருந்த மகன் ருத்ரேஷ் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவன், மனைவி இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மோதிய வேகத்தில் வாகனத்தின் முன்புறம் நொறுங்கியது.. திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி