உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சிவகங்கையில் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சிவகங்கை: சிவகங்கையில் முன் அறிவிப்பின்றி இரண்டு மணி நேரம் மின்வெட்டு நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சிவகங்கை -- திருப்புத்துார் ரோட்டில் உள்ள துணை மின் நிலையம் மூலம் சிவகங்கை நகரில் காந்தி வீதி, பெருமாள் கோயில் தெரு, கொட்டகுடி, சிவன் கோயில் பகுதிகளுக்கென 3,400 வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் மின் இணைப்பு உள்ளது. நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை முன்னறிவிப்பின்றி மின்வெட்டு செய்திருந்தனர். இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மின்வினியோகம் இன்றி தவித்தனர். ஏற்கனவே மாதம் ஒரு நாள் மின்தடை அறிவித்து மின்பாதைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் மின்வாரியம், இது போன்று இடைப்பட்ட நாட்களில் எந்தவித முன் அறிவிப்பின்றி மின்வெட்டு செய்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மின்வாரிய அதிகாரி கூறியதாவது: உயர் அதிகாரிகள் அனுமதியுடன் மின்வெட்டு செய்தோம். மின் ஒயர் செல்லும் பாதையில் இருந்த பெரிய அளவிலான மரங்களை வெட்டியும், டிரான்ஸ்பார்மர்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டோம். மின்வெட்டு குறித்த தகவல் மின்பயனீட்டாளர்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு விட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ