உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி 10ம் கட்ட அகழாய்வு: மார்ச் வரை நீட்டிப்பு

கீழடி 10ம் கட்ட அகழாய்வு: மார்ச் வரை நீட்டிப்பு

கீழடி : கீழடியில் நடந்து வரும் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கீழடி, கொந்தகையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டகாய், மீன் உருவ பானை ஓடு, தா என்ற தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, சுடுமண் குழாய் அமைப்பு, சுடுமண் பானைகள், பாசிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடங்கி மழை காலமான செப்டம்பருடன் நிறைவு பெறும், ஆனால் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் ஜூனில் தான் தொடங்கின. குறைந்த பரப்பளவில் அகழாய்வு பணிகள் நடந்து வந்தன. குறிப்பிடத்தக்க பொருட்களும் கண்டறியப்படவே இல்லை. செப்டம்பரில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப தொல்லியல் துறை அதிகாரிகளும் அகழாய்வு தளங்களை ஆவணப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். வரைபடம் வரைதல், ஹெலிகேம் கேமரா மூலம்பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளும் நடந்தன. இந்நிலையில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் அடுத்தாண்டு மார்ச் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. ஒரு மாத இடைவெளியில் 11ம் கட்ட அகழாய்வு பணிகள் மே மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவு பெறும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ