உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத சிவகங்கை மேம்பாலம்

பராமரிப்பில்லாத சிவகங்கை மேம்பாலம்

சிவகங்கை : சிவகங்கை தொண்டி ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு இல்லை. சப்வேயில் பல மாதங்களாக தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை தொண்டி ரோட்டில் நகராட்சி அலுவலகம் அருகே 2015 ம் ஆண்டு ரயில்வே துறையும் தமிழக அரசும் இணைந்து ரூபாய் 31 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.300 மீட்டர் துாரத்திற்கு சப்வே அமைக்கப்பட்டு இருபுறமும் சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாலம் அமைத்த காலத்திலிருந்து தற்போது வரை மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் சப்வேயில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை, பாலத்தின் இருபுறமும் உள்ள பக்க சுவரில் செடிகள் வளர்ந்து பாலத்தின் சுவரில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் இரு புறமும் புழுதி மணல் கிடப்பதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். மேலும் ரோட்டில் பல இடங்களில் குழியாக காணப்படுகிறது.ஆயுதப்படை குடியிருப்பு, பையூர், வந்தவாசி, பனங்காடி, ரோஸ் நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து சிவகங்கைக்குள் வரும் மக்கள் சப்வேயில் செல்ல முடியாமல் சுற்றி செல்கின்றனர்.மேம்பாலத்தை முறையாக பராமரித்து சப்வேயில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை