உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் வைகை ஆற்றில் அகற்றப்படாத சிமென்ட் கழிவுகள்

திருப்புவனம் வைகை ஆற்றில் அகற்றப்படாத சிமென்ட் கழிவுகள்

திருப்புவனம்,: திருப்புவனம் வைகை ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு 26 ஆண்டாகியும் பழைய பாலத்தின் சிமென்ட் தூண்கள், கழிவுகள் அகற்றப்படாதததால் பாலம், தடுப்புசுவர், ஷட்டர்கள் சேதமடைந்து வருகின்றன. திருப்புவனத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் 1994 ஆம் ஆண்டு வைகையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.21 கோடி செலவில் 1998ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டி திறந்தனர். புதிய மேம்பாலம் கட்டும்போது பழைய பாலத்தை இடித்து அப்புறப்படுத்தாமல் அப்படியே உடைத்து வைகை ஆற்றிற்குள் கழிவுகளை போட்டுவிட்டனர்.இந்த சிமென்ட் கழிவுகள் ஆற்றிற்குள் தேங்கி கிடக்கின்றன. இதனால் புதிதாக கட்டிய பாலத்தின் தடுப்பு சுவர் பாதிக்கப்படுகின்றன. வைகை ஆற்றில் நீர் வரத்தின் போது சிமென்ட் கழிவுகள் அதனை தடுத்து நீரை பிரமனூர் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை ஒட்டியே பல ஆண்டுகளாக சென்றதால் தடுப்புச்சுவரின் அடிப்பாகம் அரிக்கப்பட்டு தடுப்புச்சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன் 50 மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்து விட்டது. இதற்கு காரணம் சேதமடைந்த பாலத்தின் கழிவுகளை அகற்றாதது தான்.கொச்சின் முதல் தொண்டி வரை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட போதும் பழைய கழிவுகளை அகற்றவில்லை.சேதமடைந்த சிமென்ட் கழிவுகள் வைகை ஆற்றில் நீர் திறப்பை தடுத்து ஆறு முழுவதும் பரவலாக செல்லாமல் ஒரு புறமாகவே தண்ணீர் செல்வதால் வடகரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. வைகை ஆற்றில் ஆய்வு செய்து, சேதமான சிமின்ட் கழிவுகளை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை