| ADDED : ஜூன் 08, 2024 05:29 AM
காரைக்குடி கோட்டத்தில்காரைக்குடி சூரக்குடி கோட்டையூர் புதுவயல் கண்டனுார் அரியக்குடி பீர்க்கலைக்காடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள்,2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகள், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உள்ளன.விவசாயிகள் மற்றும்பொதுமக்கள் தங்களதுகால்நடைகளுக்கும், வளர்ப்பு பிராணிகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை சென்றால்அதிகம் செலவழிக்க வேண்டும் என்பதால் அரசு கால்நடை மருத்துவமனையையே அதிகம் நாடி வருகின்றனர். ஒவ்வொரு கால்நடை மருத்துவமனையிலும், ஒரு கால்நடை மருத்துவரின்கீழ், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 உதவியாளர்கள்பணியாற்ற வேண்டும். ஆனால் காரைக்குடி மட்டுமின்றி சிவகங்கை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.மேலும் 70-க்கும் மேற்பட்ட கால்நடை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. மருத்துவர்களே பெயர் பதிவு தொடங்கி விலங்குகளை பரிசோதிப்பது, சிகிச்சை அளிப்பது, ஊசி போடுவது,மருந்து வழங்குவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. ஊழியர்பற்றாக்குறையால் கால்நடை ஆய்வாளர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் என இரண்டு மூன்று மருத்துவமனைகளில் கூடுதலாக பணியாற்றுகின்றனர். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது கண்டிப்பாக உதவியாளர் ஒருவர் இருப்பது அவசியம் ஆகும். உதவியாளர் இல்லாததால் மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்க முடிவதில்லை. கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.எனவே மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.