உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகாசி விழா மே 31 துவக்கம்: ஜூன் 8 தேரோட்டம்

வைகாசி விழா மே 31 துவக்கம்: ஜூன் 8 தேரோட்டம்

திருப்புத்துார்:திருப்புத்துார் திருத்தளிநாதர் சமேத சிவகாமி அம்மன், யோக பைரவர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 8ல் தேரோட்டமும், ஜூன் 9 ல் தெப்பமும் நடைபெறும்.குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். மே30 மாலை திருநாள் மண்டபம் முன்பாக சிவாச்சார்யார்களால் வாஸ்து சாந்தி நடைபெறும்.தொடர்ந்து விநாயகர், கொடிபடம் திருவீதி வலம் நடைபெறும். பின்னர் கொடி மரத்தின் அருகில் ஐம்பெரும் கடவுளர்கள் எழுந்தருளுவர். மறுநாள், மே 31 காலை 7:30 மணிக்கு கொடியேற்றமும், இரவில் அம்மன் சன்னதி முன்பாக வில்வமரம் மற்றும் கடவுளர்களுக்கு காப்புக்கட்டி விழா துவங்கும்.சூரியன்,சந்திரன் பிறைகளில் சுவாமி,அம்பாள் திருவீதி வலம் வருவர்.தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஜூன் 3 காலையில் சுவாமிக்கு மந்திரநீர் முழுக்காட்டு தீபாராதனையும், ஜூன்4 காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணம், ஜூன் 7 காலை 7:00 மணிக்கு நடராஜர் புறப்பாடும், ஜூன் 8ல் மதியம் 3: 00 மணிக்கு மேல் தேரோட்டமும், ஜூன் 9 காலை 9:00 மணிக்கு திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல், இரவு 8:00 மணிக்கு தெப்பமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ