உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் காய்கறி சாகுபடி: கத்தரி விலை உயர்வால் மகிழ்ச்சி

திருப்புவனத்தில் காய்கறி சாகுபடி: கத்தரி விலை உயர்வால் மகிழ்ச்சி

திருப்புவனம் வட்டாரத்தில் கலியாந்துார், அல்லிநகரம்,சொக்கநாதிருப்பு, பிரமனுார், மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. கத்தரியில் கலர் கத்தரி, வரி கத்தரி, வெள்ளை கத்தரி என மூன்று ரகங்கள்இருந்தாலும் இப்பகுதியில்கலர் கத்தரிக்காயே அதிகஅளவில் பயிரிடப்படுகிறது. நெல் அறுவடை செய்த வயல்களில் கத்தரி பயிரிடப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு அறுவடை தொடங்குகிறது. நன்கு விளைச்சல் கண்டால் ஏக்கருக்கு 200 கிலோ வரை ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம், குறைந்த அளவு தண்ணீர் தேவை, பராமரிப்பு செலவு குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் கத்தரி, வெண்டை பயிரிட்டனர். போதிய விலை கிடைக்காமல் தற்போது குறைந்த அளவே விவசாயிகள் கத்தரி பயிரிடுகின்றனர். கோடை வெயில் காரணமாக மலைக்காய்கறிகளான பீன்ஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததால் நாட்டு காய்கறிகளானகத்தரி, வெண்டை, புடலை, அவரை உள்ளிட்டவைகளின் மீது மக்கள் கவனம் திரும்பியுள்ளது. கிலோ 40 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட கத்தரி, வெண்டை தற்போது 60 ரூபாய் என விலை அதிகரித்துள்ளது.விவசாயி அ.வெள்ளக்கரை பாண்டிகருப்பு கூறுகையில், ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்கிறோம், பயிரிடப்பட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு தொடர்ந்து ஆறு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கத்தரி பறிக்கலாம்.போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்த நிலையில் கடந்த இரு நாட்களாக லேசான மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. நாட்டு காய்கறிகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தினால் சாகுபடி பரப்பும் அதிகரிக்கும், என்றார். விவசாயிகளிடம் இருந்து கிலோ பத்து ரூபாய் என கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது 25 ரூபாய் என கொள்முதல் செய்கின்றனர். விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை