உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் கொட்டுமாம்!

3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் கொட்டுமாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜன.,07) 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.அதேபோல், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Balaji Gopalan
ஜன 07, 2024 14:05

நல்ல ஒரு தரமான வெற்றி .. செயற்கை மேக மூட்டம் விமானம் மூலம் ரசாயன கலவைகள் தெளிப்பது என்ன ஒரு அறிவு .. HARPER டெக்னாலஜி மூலம் செயற்கை மழை பொழிவிப்பது CHEMTRAIL முறையில் மேக வெடிப்பு ஏற்படுத்துவது மிகவும் கொடுமை . தனி மனித மாற்றம் தேவை .. படித்த முட்டாள்கள் பலர் பஞ்ச பூதங்களுடன் விளையாடுவது விபரீதம் உண்டாக்கும்


Anantharaman Srinivasan
ஜன 07, 2024 13:40

தமிழக அரசே உஷார் .. கனமழை மிக கனமழைனு சொல்லியிருங்காங்க. எங்கெங்கு எத்தனை செ.மீட்டர்னு போன் போட்டு கேட்டு தெரிஞ்சு கோங்க.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை