இளையான்குடியில் கைப்பந்து போட்டி
இளையான்குடி; இளையான்குடி டாக்டர்சாகிர் உசேன் கல்லுாரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி நடைபெற்றது. கல்லூரி ஆட்சி மன்ற குழு செயலாளர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான் போட்டிகளை துவக்கி வைத்தார். சென்னை காவல்துறை அணி முதல் பரிசும், கோவை கற்பகம் பல்கலைஅணி 2ம் பரிசும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி 3ம் பரிசும், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி முன்னாள்மாணவர் அணி 4ம் பரிசும் பெற்றனர்.தொழிலதிபர்கள் மலேசிய பாண்டியன்,கோட்டையூர் சுப்பிரமணியம் பரிசு வழங்கினர். இளையான்குடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.