உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணி: நவ. 4 முதல் டிச. 4 வரை நடக்கும்

வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணி: நவ. 4 முதல் டிச. 4 வரை நடக்கும்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (நவ., 4) முதல் துவங்கும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி, டிச., 4 ம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் பிரிவில் தெரிவிக்கின்றனர். தேர்தல் கமிஷன் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணியை மேற்கொள்ள, அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அலைபேசி ஆப் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் இருப்பு குறித்த உண்மை தன்மையை கணக்கெடுக்க உள்ளனர். இதற்காக நாளை (நவ., 4) ம் தேதி துவங்கி, மாதத்திற்கு 3 முறை ஒரு குடும்பத்திற்கு சென்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாக்காளர்களை உறுதி செய்ய வேண்டும். இந்த பணியை டிச., 4 வரை மேற்கொள்ள வேண்டும். இக்கணக்கெடுப்பிற்கு பின் டிச., 9 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளனர். டிச., 9 முதல் 2026 ஜன., 8 ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவிக்கலாம். தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிக்கான விசாரணை மற்றும் சரிபார்த்தல் பணி டிச., 9 முதல் 2026 ஜன., 31 வரை நடைபெறும். இதற்கு பின் 2026 பிப்., 7 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை