உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பட்டா நிலத்தில் சுவர்: மக்கள் போராட்டம்

 பட்டா நிலத்தில் சுவர்: மக்கள் போராட்டம்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கழுகேர்கடையில் பட்டா நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கழுகேர்கடை பெருமாள்புரத்தில் இரண்டு எக்டேர் பரப்பளவில் 65 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இக்குடியிருப்புக்கு திருப்புவனம் கண்மாய் வரத்து கால்வாயை ஒட்டி தார்ச்சாலை அமைந்துள்ளது. தார்ச்சாலை நீண்ட துாரம் சுற்றி வருவதால் பெருமாள்புரம் மக்கள் அருகில் உள்ள காலி இடத்தின் வழியாக சென்று வந்துள்ளனர். நில உரிமையாளரான முகமது பாரூக் என்பவர் அந்த இடத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடிவு செய்து சுற்றுச்சுவர் கட்ட முயன்ற போது பெருமாள்புரம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மீண்டும் சுற்றுச் சுவர் கட்டுமான பணி தொடங்கிய போது பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுற்றுச்சுவர் எழுப்பினால் கால்வாயில் மழை காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்புக்குள் தண்ணீரில் வரும். எனவே சுற்றுச்சுவர் கட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பெருமாள்புரம் கணபதி கார்த்திக் என்பவர் திருப்புவனம் தாசில்தாரிடம் புகார் கொடுத்துள்ளார். விசாரணை செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டுவதில் எந்த தவறும் இல்லை என அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனாலும் கிராம மக்கள் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் ஒதுக்கி வைப்பதற்காக கட்டப்படுகிறது என குற்றம் சாட்டியதுடன் இதுதொடர்பாக சிவகங்கை கலெக்டரிடமும் முறையிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி