உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சீரமைக்கப்படாத தொட்டியால் குடிநீர் வழங்கல் பாதிப்பு

சீரமைக்கப்படாத தொட்டியால் குடிநீர் வழங்கல் பாதிப்பு

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சீரமைக்கப்படாத தொட்டிகள், குழாய்களால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வொன்றியத்தில் மதுராபுரி ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் வேங்கைப்பட்டி, காட்டு கருப்பன்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நாடார்வேங்கைப்பட்டியில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாய்கள் பழுதடைந்து இருப்பதால் 4 நாட்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது. அப்பகுதியில் உள்ள சிறிய குடிநீர் தொட்டிகளும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். லாரிகளிலிருந்து வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் உள்ளது. எனவே செயல்படாத குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, குழாய் பழுதை சரி செய்து குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை