மேலும் செய்திகள்
வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவம்
25-Jul-2025
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண் டகப்படிகளுக்கு எழுந்தருளினார். திருக்கல்யாண விழாவிற்காக வீர அழகர் யானை வாகனத்தில் சவுந்தரவல்லி தாயார் மண்டபத்திற்கு முன் எழுந்தருளினார். திருக்கல்யாண விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் ஆக.8ம் தேதியும், 9ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
25-Jul-2025