மானாமதுரையில் வாரச்சந்தை புதன்கிழமைக்கு மாற்றம்
மானாமதுரை: மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை,பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொருட்களை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அடுத்த வாரம் வியாழக்கிழமை தீபாவளி வருவதை முன்னிட்டு அதற்கு முதல் நாள் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வாரச்சந்தை புதன் கிழமைக்கு மாற்றப்பட்டது குறித்து பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.