வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அட நம்ம பொள்ளாச்சி பக்கம் வந்து பாருங்கள்! மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம், நீதி மன்றம் மற்றும் கழிவறைகள் எல்லாம் திறப்பு விழா காணாமல் மூடியே உள்ளது இதற்கு செலவு செய்த தொகையை கேட்டால் தலை சுற்றும்.
காரைக்குடி: புதுவயல் பேரூராட்சியில் புதிய வாரச்சந்தை திறக்கப்பட்டும், பயன்பாட்டுக்கு வராததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சுட்டெரிக்கும் வெயிலில் ரோட்டில் கடைகள் நடத்தி சிரமப்பட்டனர்.புதுவயல் பேரூராட்சியில் பழைய கட்டடத்தில் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு சாக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச் சந்தை கட்டடம் கட்டப்பட்டது. புதுவயல் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தற்காலிகமாக சந்தை செயல்பட்டது.126 கடைகளுடன் கூடிய சந்தை கட்டப் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. கடந்த ஜனவரியில் புதிய சந்தை திறப்பு விழா நடந்தது. புதிய சந்தையில் கடை நடத்த டெண்டர் விடப்பட்டது. கடை நடத்த விவசாயிகளிடம் அதிக பணம் கேட்பதாகவும், விவசாயிகளுக்கு முறையாக கடைகள் ஒதுக்கப்படவில்லை என புகார் எழுந்தது.காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில், முறையாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பல மாதங்களாகியும் இதுவரை புதிய சந்தை கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. கொளுத்தும் வெயிலில் ரோட்டில் வாரச்சந்தை நடந்து வருகிறது. புதிய சந்தை கட்டடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.சி.பி.ஐ., ஒன்றிய செயலாளர்பாண்டி மீனாள் கூறுகையில்:விவசாயிகள் கடை அமைப்பதற்கு ரூ.25 ஆயிரம் வரை கேட்டனர்.பேரூராட்சியை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் சாலை மறியல் அறிவித்தோம். தொடர்ந்து காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் ராஜா தலைமையில் செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் விவசாயிகள், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். அதில், சந்தையில் உள்ள 50 கடைகள் விவசாயிகளுக்கு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டதோடு, வைப்புத்தொகை ரூ.10 ஆயிரம் மட்டுமே விதிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் 50 கடைகளை கொடுப்பதற்கு மறுத்தனர். இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விவசாயிகளுக்கு 50 கடை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி விவசாயிகளுக்கு கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.புதுவயல் பேரூராட்சி தலைவர் முகமது மீரா கூறுகையில்:மொத்தம் 126 கடைகள் தான் உள்ளது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு முறையாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகள் கூடுதலாக கடை கேட்கின்றனர். இது சம்மந்தமாக வழக்கு தொடர்ந்தனர். இதனால் வாரச்சந்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பொது ஏலம் நடத்தி முறையாக கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அட நம்ம பொள்ளாச்சி பக்கம் வந்து பாருங்கள்! மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம், நீதி மன்றம் மற்றும் கழிவறைகள் எல்லாம் திறப்பு விழா காணாமல் மூடியே உள்ளது இதற்கு செலவு செய்த தொகையை கேட்டால் தலை சுற்றும்.