பூத்துக்குலுங்கும் செங்காந்தள் சாகுபடி ஊக்குவிக்கப்படுமா
சிங்கம்புணரி: எஸ்.புதுார் பகுதியில் தோட்டங்களில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்கும் நிலையில் அவற்றின் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தின் மாநில மலர் என்ற அந்தஸ்து பெற்ற செங்காந்தள் மலர் மருத்துவ குணம் நிறைந்தது. திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் இச்செடிகளை பணப்பயிராக சாகுபடி செய்கின்றனர். இச்செடி வளர தேவையான தட்பவெப்ப நிலை எஸ்.புதூர் பகுதியில் நிலவுவதால் விவசாயிகள் சிலர் மருத்துவ தேவைக்காக இச்செடிகளை வளர்த்து வருகின்றனர். அவற்றை தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்ய விவசாயிகளை வேளாண்துறையினர் ஊக்குவித்து தேவையான மானியம், உதவிகளை வழங்கவேண்டும்.