உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முளைத்த விதைநெல் வளர மழை பெய்யுமா மதகு அணை இருந்தும் பயனில்லை

முளைத்த விதைநெல் வளர மழை பெய்யுமா மதகு அணை இருந்தும் பயனில்லை

மானாமதுரை:மானாமதுரை அருகே வேதியரேந்தலில் மதகு அணை அருகே இருந்தும் முளைத்த விதை நெல் வளர மழை பெய்யுமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர். மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல், செங்கோட்டை,ஏனாதி கோட்டை, நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாயிகள் நிலங்களை உழுது நெல் விதைகளை துாவிய நிலையில் அவை முளைத்து வரும் நேரத்தில் இப்பகுதியில் போதுமான மழை இல்லாததால் விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். வேதியரேந்தல் விவசாயிகள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள பார்த்திபனுார் மதகு அணை மூலம் இடது மற்றும் வலது பிரதான கால்வாய் மூலம் பல கிராமங்களுக்கு வைகை நீர் கொண்டு செல்லப்படுகிறது. எங்கள் வயல்களுக்கு அருகில் மதகு அணை இருந்தாலும் எங்கள் கிராமத்தில் மழை நீரைக் கொண்டு தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் தற்போது போதிய மழை இல்லாமல் முளைத்த நெல் விதை வளர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை