உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை கால பயிற்சி முகாம் விளையாட்டுத் துறை நடத்துமா

கோடை கால பயிற்சி முகாம் விளையாட்டுத் துறை நடத்துமா

திருப்புத்துார்: மாவட்டத்தில் தாலுகா வாரியாக கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்களை விளையாட்டு மேம்பாட்டு துறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாணவர்கள் கோரியுள்ளனர். பின் தங்கிய மாவட்டமான சிவகங்கையில் விளையாட்டு வளர்ச்சிக்கு கூடுதல் பயிற்சியாளர்கள் தேவையான நிலையில் அரசு சார்பில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் கால் பந்து, கபடி பயிற்சியாளர்கள் மட்டுமே உள்ளனர். பள்ளி மாணவர்கள் தங்கள் உடற்கல்வி ஆசிரியரை நம்பியே பயிற்சி எடுக்கின்றனர். ஆனால் தனி விளையாட்டுக்களில் பயிற்சி பெற சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கான பயிற்சியாளர் அவசியம். விளையாட்டு திறன் இருந்தும் பலர் பயிற்சி இல்லாமல் பின் தங்கி விடுகின்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுக்கு தனித் துறை இருந்தாலும் அதன் செயல்பாடு பெரிய அளவில் இல்லை. மாவட்டத்திற்கு பெயர்அளவில் மட்டுமே பயிற்சியாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் முக்கியமான விளையாட்டுக்களுக்கான பயிற்சியாளர்களுடன், தடகள விளையாட்டுக்களுக்கான பயிற்சியாளரையும் நியமிக்க வேண்டியது அவசியமாகும். அது போல கோடைகால பயிற்சி முகாமை மாவட்ட விளையாட்டு அமைப்புக்களே நடத்துகின்றன. ஹாக்கி சிவகங்கையிலும், வாலிபால் சிங்கம்புணரியிலும், கூடைப்பந்து சிவகங்கை, தேவகோட்டையிலும், கால்பந்து காரைக்குடியிலும் பயிற்சி முகாம் சில இடங்களில் மட்டும் நடத்தப்பட்டுள்ளன. வசதி, வாய்ப்புள்ளவர்கள் மட்டுமே அதில் பங்கேற்க முடிகிறது. அரசு சார்பில் எந்த விளையாட்டுப்பயிற்சி முகாமும் நடத்தப்படுவதில்லை. கிராம மாணவர்கள் விளையாட்டுக்களில் பங்கேற்கவும், தகுதியான இளைஞர்கள் விளையாடும் வாய்ப்பைபெறவும், அனைத்து விளையாட்டுக்களுக்கும், தடகளத்திற்கும் அரசு போதிய பயிற்சியாளர் நியமிப்பதுடன் மாவட்டத்தில் தாலுகாவாரியாக கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ