உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மணலுாரில் அதிகரிக்கும் விபத்து உயர் மின்கோபுர விளக்கு அமையுமா

மணலுாரில் அதிகரிக்கும் விபத்து உயர் மின்கோபுர விளக்கு அமையுமா

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மணலுாரில் நான்கு வழிச்சாலையில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் மணலுார் கிராமம் அமைந்துள்ளது. மணலுாரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், செங்கல் சேம்பர்கள், பிளாஸ்டிக் குழாய், பந்து தயாரிக்கும் கம்பெனி என பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மணலுார், அகரம், ஜோதிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் மணலுார் வந்து தான் பஸ் ஏறி வெளியூர் செல்ல வேண்டும்.தினசரி மதுரைக்கு செல்ல ஏராளமானவர்கள் மணலுாரில் நின்று பஸ் ஏறி, இறங்கி வருகின்றனர். மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் மணலுார் வழியாகத்தான் சென்று வருகின்றன. மணலுார் பஸ் ஸ்டாப் அருகே போதிய வெளிச்சம் இல்லாததால் தினசரி விபத்து நடந்து வருகின்றன. இரவு நேரத்தில் சாலையை கடப்பவர்கள் தெரியாததால் அடிக்கடி வாகனங்கள் மோதி உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. மணலுார் பஸ் ஸ்டாப்பில் உயர் மின் கோபுர விளக்கு அமைத்தால் விபத்துகளை தடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ