மேலும் செய்திகள்
வாலிபரிடம் ரூ.27.28 லட்சம் மோசடி
12-Jan-2025
சிவகங்கை:காரைக்குடி பெண்ணிடம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் வரை மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பெண்ணின் அலைபேசிக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் வந்த தகவலில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தகவல் அனுப்பிய நபர்களை நம்பி ஜன.11 முதல் ஜன.21 வரை 11 வங்கி கணக்குகளில் அவர்கள் தெரிவித்தபடி 26 முறை ரூ.27 லட்சத்து 45 ஆயிரத்து 673 வரை அப்பெண் செலுத்தியுள்ளார். அதற்கு பின் அந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இம்மோசடி குறித்து சிவகங்கை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விசாரிக்கிறார்.
12-Jan-2025