உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி நாளை வரை நடைபெறும் 

மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி நாளை வரை நடைபெறும் 

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக சமுதாயக்கூடத்தில் மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் 3 நாட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட திட்ட அலுவலர் சதாசிவம் துவக்கி வைத்தனர். புள்ளியியல் அலுவலர் சரவணக்குமார், உதவியாளர்கள் காசி விஸ்வநாதன், ராஜிவ் காந்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துவிக்னேஷ்வரன் ஒருங்கிணைத்தனர். கண்காட்சியில் மகளிர் குழுவினர் தயாரித்த உற்பத்தி பொருட்கள், காதிகிராப்ட் ஜவுளிகள், காரைக்குடி அழகப்பா பல்கலை திறன் மேம்பாட்டு துறை மாணவர்கள் தயாரித்த பொருட்கள் என 16 ஸ்டால்களில் பொருட்களை வைத்திருந்தனர். மத்திய அரசின் நிதி ஆயோக் லட்சிய இலக்கு வட்டார திட்டம், சம்பூர்ணா அபியான் ஆகாங்ஸ்கா ஹத், சக்தி சங்கமம் ஆகிய அமைப்புகள் சார்பில் இக்கண்காட்சி அக்., 10 ம் தேதி வரை தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். இங்கு மகளிர் குழுவினர் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றனர். காதிகிராப்ட் நிறுவனம் சார்பில் 30 சதவீத தள்ளுபடியில் ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி