உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையோர் கருத்தரங்கு

இளையோர் கருத்தரங்கு

திருப்புத்துார்: திருப்புத்தூர் கிளை நூலகத்தில் இளையோர் கருத்தரங்கு நடந்தது.எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார்.ஞானபண்டிதன் எழுதிய நுாலை எழுத்தாளர் ஜவஹர் வெளியிட்டார். சிவகங்கை வாசகர் வட்டத் தலைவர் அன்புதுரை ஞானபண்டிதனை அறிமுகப்படுத்தினார். கவிஞர் பாரதி வாஹித், பேராசிரியர் சாம்ராஜ் வாழ்த்தினர்.இக்கருத்தரங்கில் ஆ.பி.சீ.அ.கல்லூரி மாணவிகள் அனிஷாஸ்ரீ, ராஜீ ஆயிஷா, கங்கா, வாசுகி மற்றும் நா.ம.,பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் டக்சனா, ஆசியா, யன்சியா, பிரீத்தி, கீர்த்தி, ஆ.பி.,மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி, சவுமியா, சட்டகல்லூரி மாணவி பவதாரணி ஆகியோர் பேசினர்.பேராசிரியர் வேலாயுதராஜா பரிசு வழங்கினார். உதவியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ