மேலும் செய்திகள்
மின் வேலி அமைத்து விலங்கு வேட்டை
24-Dec-2025
போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு
06-Dec-2025
தென்காசி:சங்கரன்கோவில் அருகே இரவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலியானான்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சுப்புலாபுரத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி வேல்முருகன் மகன் அபிலேஷ், 13. நேற்று இரவு, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கிருந்த இரும்பு கம்பியை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தான். முதலுதவி சிகிச்சை அளித்து சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். கரிவலம்வந்தநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Dec-2025
06-Dec-2025