இன்ஜினியருக்கு வெட்டு: 4 பேரிடம் விசாரணை
தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குவளைக்கண்ணியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 47. சிவகிரி அருகே ராயகிரியில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு புளியங்குடியில் இருந்து ராயகிரிக்கு காரில் சென்ற போது ரத்தினபுரி பகுதியில் காரை வழிமறித்த 5 பேர் கும்பல் அவரை சரமாரியாக அரிவாளாலும் இரும்பு கம்பிகளாலும் தாக்கி விட்டு தப்பினர்.தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். புளியங்குடி போலீசார் விசாரித்தனர். அவரது குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்னையால் உறவினர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக நான்கு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.