| ADDED : மார் 29, 2024 12:14 AM
தென்காசி:''கட்சிகள் கேட்கும் சின்னங்கள் தேர்தல் ஆணையம் வழங்குவதில்லை'' என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தென்காசி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சியுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். இங்க வேலைவாய்ப்பில்லை. நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. அவர்களுக்கான சரியான கூலி இல்லை. என்னை வெற்றி பெற செய்தால் பார்லியில் குரல் கொடுப்பேன். தென்காசி, விருதுநகரில் தொழிற்சாலைகள் அதிகம் இல்லை. கட்சி, சின்னம், வேட்பாளர் என மக்கள் புரிந்து கொள்வார்கள். தேர்தல் அலுவலர் ஒரு மணி நேரம் கூட்டம் போட்டு பேசினார். நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவோம் என்று எடுத்துக் கூறினார். ஆனால் கட்சிகள் கேட்கும் சின்னங்கள் வழங்கப்படுவதில்லை.தேர்தல் நடத்தைவிதிமுறை அமலில் உள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 100 நாள் வேலை திட்டதில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அறிவிக்கிறார். இது தேர்தல் விதிமீறல் இல்லையா. மத்திய அரசு தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை கையில் வைத்துக்கொண்டு தமிழகத்தை மிரட்டி கொண்டிருக்கின்றது. குறுகிய காலம் அவகாசம் உள்ளதால் தேர்தலுக்கு மக்களிடம் நேரடியாவும், ஊடகம் வாயிலாகவும், டிஜிட்டல் முறையிலும் ஓட்டு சேகரிக்க உள்ளோம் என்றார்.