பக்கெட் பிரியாணி சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்
தென்காசி:தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டளையூரை சேர்ந்த சகோதரர்கள் அழகு ராஜன் 43. கண்ணன் 38. இவர்கள் நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் ஓட்டலில் அசைவ பிரியாணி பக்கெட் பார்சல் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து சாப்பிட்டனர்சிறிது நேரத்தில் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடையம் தனியார் மருத்துவமனையில் தந்தை மாடசாமி 77, அழகு ராஜன், கண்ணன், கண்ணன் மனைவி அன்னலட்சுமி ,அவரது குழந்தைகள் ஹரிஷ்கா, ஹரிணி, ஹரிஹரசுதன் மற்றும் அழகுராஜன் குழந்தைகள் ஸ்ரீராம், ரித்திகா ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கெட்டுப்போன உணவு சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என கடையம் போலீசார் விசாரிக்கின்றனனர்.