உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  மின் இணைப்பிற்கு லஞ்சம்; இளநிலை பொறியாளர் கைது

 மின் இணைப்பிற்கு லஞ்சம்; இளநிலை பொறியாளர் கைது

தென்காசி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், கீழ வீராணத்தை சேர்ந்தவர் செல்வகணேஷ், 30; இவர், தன் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள இலவச மின் இணைப்பிற்கு, 24,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தார். மின் இணைப்புக்கு, 7,000 ரூபாய் தருமாறு, வி.கே.புதுார் மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் கேட்டார். செல்வ கணேஷ், தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுறுத்தலில், 7,000 ரூபாயை நேற்று, வி.கே.புதுார் மின்வாரிய அலுவலகத்தில் பிரேம் ஆனந்திடம் கொடுத்தபோது, அவர் தன் நண்பரான தெற்கு கழநீர்குளத்தை சேர்ந்த துரை என்பவரிடம், பணத்தை கொடுக்கும்படி கூறினார். பணத்தை துரை பெற்றபோது, மறைந்திருந்த போலீசார், துரை, பிரேம் ஆனந்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை