மேலும் செய்திகள்
ரயிலில் கடத்தி வந்த பணம் ரூ.60 லட்சம் பறிமுதல்
01-May-2025
தென்காசி:தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கொண்டு சென்ற ஹவாலா பணம் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே கணக்கில் வராத ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர்ந்து நடக்கிறது. சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புனலுார் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் , ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் பொதுப் பெட்டியில் வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லுாரை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் பையில் ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் வைத்திருந்தார். இவர் கடையநல்லுாரில் ரயிலில் ஏறி உள்ளார். அந்த பணத்திற்கான கணக்கு காண்பிக்க முடியாததால் அவரை போலீசார் கைது செய்தனர். அதே ரயிலில் அவருடன் பயணித்த விருதுநகரை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவரும் கைது செய்யப்பட்டார். பாலாஜி நீண்ட காலமாக கொல்லத்தில் குடியிருந்து வருகிறார். இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் புனலுார் ரயில்வே ஸ்டேஷனில்மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
01-May-2025