உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு : பெண் உட்பட 4 பேர் கைது

போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு : பெண் உட்பட 4 பேர் கைது

தென்காசி: தென்காசியில் நடந்த இரண்டாம் நிலை போலீஸ் எழுத்து தேர்வில் அலைபேசி மூலம் தேர்வு எழுத முயற்சித்தவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. தென்காசி அருகே இலஞ்சி பள்ளியில் நடந்த எழுத்து தேர்வில், சிவகிரியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் 23, தேர்வு எழுதினார். அவர் தேர்வறைக்கு அலைபேசியை கொண்டு சென்று இருந்தார். கேள்வித்தாளை அவர் படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் சிவகிரியைச் சேர்ந்த நண்பர்கள் பாண்டியராஜன் 23, மல்லிகா 22, ஆகியோருக்கு அனுப்பினார். அவர்கள் உடனடியாக பதில்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினர். அதனை கவனித்த தேர்வு அறை கண்காணிப்பாளர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவருக்கு பதில்கள் வழங்கிய பாண்டியராஜன், மல்லிகா மற்றும் தேர்வு பயிற்று மையம் நடத்தும் நாமக்கல் பயிற்சியாளர் பிரதீப் 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோபிகிருஷ்ணன் தேர்வு வளாகத்திற்குள் அலைபேசி கொண்டு செல்லும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடாக இருந்ததற்காக போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ