உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / மணல் மாபியாக்களுக்கு துணை போறாங்க.. போலீஸ் வேலையே வேணாம்; டி.ஜி.பி.,க்கு சிவகிரி ஏட்டு கடிதம்

மணல் மாபியாக்களுக்கு துணை போறாங்க.. போலீஸ் வேலையே வேணாம்; டி.ஜி.பி.,க்கு சிவகிரி ஏட்டு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: மணல் மாபியாக்களுக்கு போலிஸ் அதிகாரிகள் துணை போவதாகக் குற்றம்சாட்டிய தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலைய ஏட்டு, டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு' கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகிரி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர், வெறும் கம்ப்யூட்டர் பில்களை மட்டும் வைத்துக் கொண்டு, கனிமவளங்களைக் கொள்ளையடித்து வருவதை கண்டு பிடித்துள்ளார். அப்படி, மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து, காவல்நிலையம் கொண்டு சென்றால், அங்குள்ள அதிகாரிகள், போலி இரசீதுகளை தயார் செய்து, சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவிப்பதாக பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7l75owf2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டு செல்லும் போது, இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே, கொள்ளை கும்பல் தன்னை மிரட்டி, வாகனங்களை எடுத்துச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மணல் மாபியாக்களுக்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகள், லஞ்சம் வாங்கி குவித்துக் கொள்வதாக குற்றம்சாட்டிய பிரபாகரன், கனிம வளக் கொள்ளை அதிகம் நடக்கும் சிவகிரியில் உயிருக்கு அச்சுறுத்தலோடு பணியாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.எனவே, தன்னை போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கக்கோரி டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளார். மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்த மறுநாளே, தனக்கு வேறு பணி கொடுக்கப்பட்டதாகவும் அவர் அதில் குற்றம்சாட்டியுள்ளார். காவல் கண்காணிப்பாளர் உள்பட காவல் உயரதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வாகனங்களை கடத்திச் சென்ற விக்னேஷ் பி.எல்.ஆர் மற்றும் தாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தன் மீது வன்முறை தாக்குதலோ, வாகன தாக்குதலோ நடந்தால், அதற்கு முழுக் காரணம் தென்காசி காவல் கண்காணிப்பாளரும், சப்டிவிஷன் அதிகாரிகளும், மணல் மாபியாக்களுக்கு தான் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

rama adhavan
டிச 28, 2024 00:34

இவர் மீது இல்லாதை இப்போ போலீஸ் சொல்லும்.


Oru Indiyan
டிச 27, 2024 21:53

டி ஜி பி ஒரு டம்மி ...


Ram
டிச 27, 2024 21:46

திராவிட ஆட்சி என்றாலே திருட்டு மட்டும்தான்


விவசாயி
டிச 27, 2024 21:13

உண்மையை தெளிவாக கூறியுள்ளார்


பெரிய ராசு
டிச 27, 2024 21:03

மேற்கொண்டு நீங்க ஆதாரத்துடன் திரு அண்ணாமலையை அணுகவும் ..அனைத்து ரவுடி , போலீஸ் மற்றும் அரசியல்வாதியை பிரித்து பெண பார்த்துடுவார் ... கழிவுவளை கேரளா அனுப்பிய நாயகன் ,


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
டிச 27, 2024 19:56

கடவுள் இந்த நேர்மையான நண்பருக்கு துணை நிற்கட்டும்.


தமிழ்வேள்
டிச 27, 2024 19:41

ஓய் பேரறிஞரே, ஒன்றுக்குமே உதவாத அடுக்கு மொழி பேசி ஊரைக்குழப்பி பொய்களால் தோரணம் கட்டி, ஆட்சி அமைத்து, கடைசியில் எதற்கும் லாயக்கு அற்ற திருட்டு புரட்டு சாராயம் மதமாற்றம் தேசத்துரோகம் போதைக்கடத்தல் மட்டுமே தெரிந்த ஒரு கிரிமினல் கும்பலின் பிடியில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சிக்க வைத்து இப்போது கேணப்பயல் தமிழர்களைப் பார்த்து சிரித்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறீரா?


குமரன்
டிச 27, 2024 18:56

செங்கோட்டை புளியரை வழியாகவும். ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் ஒன்றன்பின் ஒன்றாகவும் பெரிய பெரிய டாரஸ் வண்டிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கிறது இங்குள்ள கனிமவளங்கள் அடுத்த தலைமுறைக்கு இல்லாத நிலை ஏற்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் கேரளா முழுவதுமாக மலைகளாலக உள்ளன ஆனால் அவர்கள் அதை பாதுகாக்கிறார்கள் இங்கே லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிக்கிறது மகாபாவம் அது உங்கள் வம்சத்தை பாதிக்கும் தயவுசெய்து நேர்மையாக இருங்கள்


பெரிய ராசு
டிச 27, 2024 21:01

இதில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் தெய்வம் நின்று கொல்லும்


Bala
டிச 27, 2024 18:28

தலை வணங்குகிறேன் பிரபாகர். நலமுடன் வாழ்க பல்லாண்டு.


Anantharaman Srinivasan
டிச 27, 2024 18:26

பிரபாகரன் ஆயுள் நித்திய கண்டம் .. மாபியாக்ககள் பழிதீர்ப்பர்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை