உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஓட்டளிக்க 16 கி.மீ., துாரம் லோடு வாகனத்தில் பயணம்

ஓட்டளிக்க 16 கி.மீ., துாரம் லோடு வாகனத்தில் பயணம்

திருவையாறு:தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே விட்டலபுரம் கிராமம் உள்ளது. காவிரி கரையின் வலது புறத்தில் விட்டலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்கள் உள்ளன. இடதுபுற கரையோரத்தில் காவிரி படுகை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு அளிக்க விட்டலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடியில் ஒட்டளிக்க வர வேண்டும். ஆனால் இந்த கிராமத்திற்கு வர வேண்டும் என்றால், தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 8 கி.மீ., பயணம் செய்ய வேண்டும்.அதன்படி, காவிரி படுகை கிராமத்தில் இருந்து திருகாட்டுப்பள்ளி வழியாக விட்டலபுரத்திற்கு நேற்று, 8 கி.மீ., லோடு வாகனத்தில் வந்து ஓட்டளித்து மீண்டும் அதே வழியில் சொந்த ஊர் திரும்பினர். இவ்வாறு, 16 கி.மீ., வந்து சென்றனர்.இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது,'விவசாய கூலி தொழிலாளர்களான நாங்கள் ஒவ்வொரு முறையும் இது போல தான் வந்து ஓட்டு போட்டு செல்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி