மேலும் செய்திகள்
குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை முற்றுகை
21-Feb-2025
தஞ்சாவூர்; பலுானை விழுங்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஏழு மாத ஆண் குழந்தை இறந்தது.தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 35. இவரது மனைவி சிவகாமி, 30. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தை பிரகதீசன். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, திடீரென மயங்கி, வெகுநேரமாகியும் அசைவு இல்லாமல் இருந்துள்ளது. குழந்தையின் தாய், குழந்தைக்கு பால் கொடுக்க முயன்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையில், குழந்தையின் தொண்டை பகுதியில் பலுான் சிக்கி இருந்தது தெரியவந்தது.குழந்தை பலுானை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
21-Feb-2025