தஞ்சை பெரிய கோவிலில் மீண்டும் கிரிவலம்
தஞ்சாவூர் : உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ஆறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம், கொரோனா போன்ற காரணங்களால் தடைபட்டது. மீண்டும் கிரிவலம் துவக்க, அரண்மனை தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அரண்மனை தேவஸ்தானம், இந்திய தொல்லியல் துறை அனுமதியோடு கிரிவலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கிரிவலம் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு, அங்கு குடிநீர், கழிப்பறை, தற்காலிக மின் விளக்குகள் ஏற்படுத்தப்பட்டன.இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று, 3 கி.மீ., துார, பெரிய கோவிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தனர்.