மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு போக்சோ
27-Dec-2025
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
தஞ்சாவூர்:திருவாரூரை சேர்ந்த காஞ்சி, 64, இவர், கடந்த 2008ம் ஆண்டு கும்பகோணம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றினார். அப்பகுதியில் உள்ள டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஸ்ரீதர் என்பவரிடம், டிரைவிங் லைசன்ஸ் வழங்க 1,200 ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. ஸ்ரீதர் புகார் படி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரித்த வலையில், புரோக்கர் மூர்த்தி என்பவருடன், காஞ்சியும் சிக்கினார்.இந்த வழக்கு, கும்பகோணம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்ட மூர்த்தி இறந்து விட்டார்; காஞ்சி ஓய்வுபெற்று விட்டார். லஞ்சம் பெற்ற வழக்கு, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று முடிவுக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட காஞ்சிக்கு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
27-Dec-2025
15-Dec-2025