உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இளம்பெண்ணை ஆசைகாட்டி மோசம் செய்த காதலன் கைது

இளம்பெண்ணை ஆசைகாட்டி மோசம் செய்த காதலன் கைது

தஞ்சாவூர்: இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைகாட்டி மோசம் செய்த காதலன் மற்றும் அப்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த காதலனின் தாயை போலீஸார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த தங்கமணி மகள் மணிமொழி (21). தஞ்சை பி.எல்.ஏ., பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்தார். இவருடன், தஞ்சை பூக்காரத்தெருவை சேர்ந்த அழகர்சாமியின் மகன் வினோத் (24) என்பவரும் வேலை பார்த்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் உல்லாசமாக சுற்றித்திரிந்தனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மணிமொழியிடம் வினோத் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.சில மாதத்தில் மணிமொழியிடம் பழகுவதை, பேசுவதை வினோத் தவிர்த்தார். மணிமொழி வற்புறுத்தி கேட்கவே, 'தனது வீட்டில் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்' என்று வினோத் திருமணத்துக்கு மறுத்தார். அதையடுத்து வினோத்தின் வீட்டுக்கு சென்ற மணிமொழி, வினோத்தின் தாய் உஷாவிடம், 'முறைப்படி' மாப்பிள்ளை கேட்டார். ஆத்திரமடைந்த உஷா, 'கொலை செய்து புதைத்துவிடுவேன்' என்று மணிமொழியை மிரட்டினார். அதிர்ச்சியடைந்த மணிமொழி, தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனின் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து, வினோத், அவரது தாய் உஷாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை