உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / லோடு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாப சாவு

லோடு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாப சாவு

தஞ்சாவூர் : மயிலாடுதுறை மாவட்டம், வைகல் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு, 20. இவர், தஞ்சாவூர் மாவட்டம், எஸ்.புதுாரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் லோடு ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, செங்கரான்குடி பகுதியில், வளைவில் திரும்பிய போது, பிரேக் பிடிக்காததால், சிவகுரு ஓட்டிச் சென்ற ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. இதில், சிவகுரு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். திருநீலக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !