உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கம்பஹரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: கவர்னர் தரிசனம்

கம்பஹரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: கவர்னர் தரிசனம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் உள்ளது, பிரசித்தி பெற்ற அறம் வளர்த்த நாயகி சமேத கம்பஹரேஸ்வரர் கோவில். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவில், 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.இக்கோவிலில், 16 ஆண்டுகளுக்குப் பின், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தன் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன், மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல ஆதீனங்கள் பங்கேற்றனர். மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக கவர்னர் பக்தியானவர். அவர் வருவது தவறு ஒன்றும் இல்லை. விரும்பி இங்கு வந்தார். இங்கு வந்திருந்த அனைத்து ஆதீனத்திடம் ஆசி வாங்கினார். கருப்புக் கொடி காட்டினால் காட்டிவிட்டு போகட்டும். அவர் தைரியமான ஆள்; தைரியமாகத் தான் வருகிறார்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை